சீரியலில் முதன்முறையாக ஹிஜாப் அணித்து நடிக்கும் இஸ்லாமிய நடிகை: எதிர்நீச்சலின் மற்றொரு சாதனை!
சீரியல் வரலாற்றில் முதன்முறையாக ஹிஜாப் அணிந்து எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார் ஸீபா ஷெரின்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் பரபரப்பில் கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. நன்கு படித்த பெண்களை அவர்களின் சுதந்திரத்தை பறித்து வீட்டில் வேலைக்காரியை போல் நடத்தி வரும் ஒரு ஆணாதிக்கத்தை எடுத்துக் காட்டுவது போலதான் கொண்டு செல்கிறார்கள்.
இந்த சீரியலில் கனிகா, மாரிமுத்து, சத்தியப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, என ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் அனைவரின் நடிப்பு கொஞ்சம் வெகுளியாகவும் கொஞ்சம் கொஞ்சலாகவும் நகைச்சுவையாகவும் மிரட்டலாகவும் நடித்து சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
சீரியலில் நடிக்கும் இஸ்லாமிய பெண்
இந்த சீரியலில் இத்தனை நாள் ஆட்டம் காட்டி வந்த ஆதி குணசேகரனின் ஆட்டத்திற்கு முடிவு கட்டும் வகையில் ஜீவானந்தம் எனும் கதாபாத்திரத்தில் இயக்குனர் மாஸ் காட்டி வருகிறார்.
இதில், அவருக்கு உதவியாளராக நடித்து வரும் பர்ஹானா என்கிற ஸீபா ஷெரின் வரலாற்றில் முதன் முறையாக சீரியலில் ஹிஜாப் அணிந்து நடித்து வருகிறார்.
மேலும், இவருக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் அதே சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவி பரிந்துரை செய்திருக்கிறார். இவர் ஆடிஷனில் நன்றாக நடித்ததால் பர்ஹானா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.
ஆனால் சீரியலில் தான் ஹிஜாப் அணிந்து தான் நடிப்பேன் என சொல்ல அதற்கு இயக்குனர் ஓகே சொல்ல தொடர்ந்தும் ஹிஜாப் அணிந்து அணிந்து வருகிறார்கள்.
இவ்வாறு இவர் நடிப்பது தேசிய அளவில் தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும், சீரியல் வரலாற்றிலும், இஸ்லாமிய நடிகை ஒருவர் ஹிஜாப் அணிந்து நடித்து வருவது இதுவே முதல் முறை என்பதால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |