லீக்கான வீடியோ ஆதாரம்.. ஆட்டி வைக்கும் அறிவுக்கரசி- நடந்தது என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் அறிவுக்கரசியும் அன்புக்கரிசியும் சேர்ந்து பார்கவியை ஒருவழி பண்ணும் சமயத்தில் சக்தி விவாகரம் தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரம் சிக்கியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
வழக்கமாக செல்லும் சீரியல் போன்று அல்லாமல் குறித்த சீரியலின் கதைகளம் சற்று வித்தியாசமாக செல்கின்றது. தர்ஷன் திருமணத்தில் ஆரம்பித்த அதிரடி ஆட்டம் சக்தி கொலைச் செய்யும் அளவுக்கு விறுவிறுப்பாக நகர்த்தப்படுகிறது.
Bigg Boss: ஆட்டம் போட்ட திவ்யா, சாண்ட்ராவிற்கு கிடைத்த முத்திரை... சுயரூபத்தை காட்ட ஆரம்பித்த போட்டியாளர்கள்
சக்தி ராமேஷ்வரத்திற்கு சென்று தேவகி குறித்த உண்மைகளை திரட்டிக் கொண்டு வரும் வேளையில், குணசேகரன் அனுப்பிய ஆட்கள் வழிமறித்து சக்தியை கொலைச் செய்ய முயற்சிக்கிறார்கள்.

இவர்கள் பல முயற்சி செய்தும் சக்தியை நெருங்க முடியவில்லை. அதன் பின்னர் சக்தி கால்நடையாக நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது மர்ம கும்பல் ஒன்று சக்தியை கடத்திச் செல்கிறது. சக்தியை கடத்தியது குணசேகரன் தான் என தெரியவந்த பின்னர் வீட்டிலுள்ளவர்கள் அதிர்ச்சியாகிறார்கள்.
குறி வைக்கப்படும் பார்கவி
இந்த நிலையில், குணசேகரன் ஆடிய ஆட்டத்திற்கு அன்புக்கரசியுடன் அறிவுக்கரசியும் சேர்ந்து விடுகிறார்.
சிறையில் இருந்து வெளியில் வந்த அறிவுக்கரசி மீண்டும் குணசேகரன் குடும்பத்தினருக்கு எதிராக வேலைகளை பார்த்து கொண்டிருக்கிறார். தர்ஷன் பார்கவி இருவருக்கும் இடையில் சண்டையை ஏற்படுத்தி எப்படியாவது பிரித்து விடலாம் என திட்டம் போட்டு சதியை வலைகளை விரிக்கிறார்.

இது ஒரு புறம் இருக்கையில், சக்தியை தேடிச் சென்ற ஜனனிக்கு ஒரு சிசிடிவி காணொளியொன்று கிடைக்கிறது. அதில் பார்க்கும் பொழுது சக்தியை ஒருவர் பின்தொடர்வது தெரிகிறது.
எப்படியாவது தன்னுடைய கணவரை காப்பாற்றி விட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் ஜனனிக்கு இது முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |