Ethirneechal: சக்தியை சித்ரவதை செய்வது யார்? உண்மை அறிந்ததும் பேரதிர்ச்சியில் ஜனனி
எதிர்நீச்சல் சீரியலில் சக்தியை கடத்தி வைத்து சித்ரவதை செய்யும் நபர் யார் என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற பெயரில் வெளியாகி வருகின்றது.
தற்போது குறித்த சீரியலில் கதைகளம் வித்தியாசமாக செல்கின்றது. சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இந்த சீரியலில் பல அதிரடியான டுவிஸ்ட்கள் அரங்கேறியுள்ளது.

தனுஷ்கோடி சென்று குணசேகரன் குறித்த மிகப்பெரிய உண்மையைக் கண்டறிந்த சக்தி வீடு திரும்பும் போது மர்மகும்பலால் கடத்தப்பட்டார்.
பின்பு சக்தியை அடித்து தலைகீழாக தொங்கவிட்டு அந்த காணொளியினை ஜனனிக்கு அனுப்பி பரபரப்பின் உச்சத்திற்கு செல்ல வைத்துள்ளார்.
தற்போது ஜனனி குணசேகரனிடம் சரணடைந்துள்ளார். மேலும் இந்த உண்மையை வெளியே சொல்லக்கூடாது என ரேணுகா மற்றும் நந்தினியிடம் சத்தியமும் வாங்கியுள்ளார்.
குணசேகரன் சக்தியை கடத்தியது யார் என்பதை ஜனனியிடம் கூறியுள்ளார். அதாவது தனது தம்பியை தானே அடிக்க கூறுவது கஷ்டமாக இருந்ததால், ஜனனியின் தந்தையின் சொந்தம் முதல் பாகத்தில் வந்த ஜனனியின் தங்கையின் திருமணத்தினை நிறுத்தி அவளது காதலனுக்கு சக்தியும், ஜனனியும் திருமணம் செய்து வைத்தனர்.
இதுநாள் வரை பழிதீர்க்க சமயம் பார்த்து வந்த அவரை குணசேகரன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு காரியத்தை நடத்தி முடித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |