மானை துரத்தி வேட்டையாடுவது போல் நடித்து அசத்திய புலி! இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி
புலியொன்று மானை துரத்தி வேட்டையாடுவது போல் நடிக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
இந்த காட்சியில் புலி மட்டுமன்றி மானும் ஓடுவது போல் நடித்துள்ளது தான் சிறப்பு. என்னங்க சொல்லுறீங்க ஒன்னுமே புரியலன்னு நினைக்கிறீங்கா?

ஆம் இப்படியொரு காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. தற்காலத்தில் அறிவியல் துறையானது விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
21ம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் தான் உலகில் மிகப்பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது என்றால் மிகையாகாது.

செயற்கை நுண்ணறிவு பேசுபொருளாக மாறியதிலிருந்தே அசுர வேகத்தில் பல மேம்படுத்தல்களை சந்தித்து வருவதுடன்,நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, பல வேலைகளை நொடிப்பொழுதில் செய்து அசத்தி வருகிறது.
அந்தவகையில், தற்போது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புலி மானை வேட்டையாடுவது போல் நடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருவதுடன் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |