Ethirneechal: மரணிக்கும் தருவாயில் சக்தி... உயிரைக் காப்பாற்ற ஜனனி நடத்தும் போராட்டம்
எதிர்நீச்சல் சீரியலில் சக்தியை ராமசாமியிடம் இருந்து காப்பாற்றிய ஜனனி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பல போராட்டங்களை சந்தித்து வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன், அறிவுக்கரசியின் ஆட்டம் எல்லைமீறி செல்கின்றது. குணசேகரன் தனது கௌரவத்திற்காக இளம்வயதில் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குணசேகரன் தேவகி குறித்த உண்மையைக் கண்டறிந்து வீடு திரும்பிய சக்தி, இறுதியில் ராமசாமியால் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.
சக்தியை காணாமல் தவித்த ஜனனியை தனியாக அழைத்து, காணொளியினை காட்டி மிரட்டி அவரை காலில் விழ வைத்தார். மேலும் ஜனனியை காரணம் காட்டி வீட்டு பெண்களையும் அடக்கி வைத்துள்ளார்.
தர்ஷன் பார்கவிக்கு திருமணம் நடைபெறவில்லை என்றும் அன்புவிற்கும், தர்ஷனுக்கும் தான் திருமணம் நடைபெற்றதாகவும் பதிவு செய்து அதற்கான சான்றிதழையும் வாங்கியுள்ளார்.

சக்தியை காப்பாற்றிய ஜனனி
ஒருவழியாக பல போராட்டத்திற்கு பின்பு ராமசாமியிடமிருந்து சக்தியைக் காப்பாற்றியுள்ளார். ஜனனி துப்பாக்கி முனையில் ராமசாமியிடம் மாட்டிய போது தனது கையில் இருந்த ஸ்பிரேயை பயன்படுத்தி அங்கிருந்து எஸ்கேப் ஆகினார்.
மேலும் சக்தியையும் கண்டுபிடித்து அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் வரும் வழியில் ராமசாமிக்கு தெரிந்த போலிசார் ஜனனியை மறித்து சிகிச்சைக்கு தடை போட்டனர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக நீதிபதி ஒருவர் வந்து அவரது கட்டளையின் பெயரில் இறுதியாக கதிரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சக்தி உயிர் பிழைப்பாரா? வீட்டில் தர்ஷன் அன்புவின் திருமணம் நடைபெறுமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |