நாச்சியப்பன் குடும்பத்திடம் சரணடைந்த குணசேகரன்.. பரிதவிக்கும் ஈஸ்வரி
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தன்னுடைய மகளை மீட்டுக் கொண்டு வருவதற்காக நாச்சியப்பன் குடும்பத்தினருடன் கூட்டு சேர்ந்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் குணசேகரன் தன்னுடைய ஒரே மகளான தர்ஷினியை கொடுத்த வாக்கிற்காக கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து விட்டார்.
இதனால் அவரை பரீட்சை முடிந்த பிறகு பள்ளிக் கூட போக வேண்டாம் என உறுதியாக கூறி விட்டார். அவர் விளையாடக் கூடாது எனவும் அவரின் பயிற்சியாளரிடம் கூறிய காரணத்தினால் விளையாட்டிலும் இனி சேர்க்க மாட்டேன் என பயிற்சியாளர் கூறிவிட்டார்.
இப்படி பல பிரச்சினைக்கு முகங் கொடுத்த தர்ஷினி வீட்டிற்கு கவலையாக வரும் பொழுது அவரை வழி மறித்து கடத்தல் குடும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளது.
நாச்சியப்பன் குடும்பத்தினர்
இந்த நிலையில் ஈஸ்வரி தன்னுடைய மகளை காணாமல் பரிதவித்து தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் குணசேகரன் தன்னுடைய மனைவி ஈஸ்வரி தான் மகளை ஒளித்து வைத்து கொண்டு நாடகம் போடுவதாக கூறுகிறார்.
இதனை தொடர்ந்து ஜான்சி ராணியையும் கரிகாலனையும் ஜனனி பொலிஸிடம் பிடித்து கொடுத்துள்ளார். அப்போது தான் குணசேகரனை எதிர்த்து கதிர் முதல் தடவையாக வாய் திறக்கிறார்.
கதிர் பேசியதை கேட்டு மனமுடைந்து போன குணசேகரன் நாச்சியப்பன் குடும்பத்திடம் உதவி கேட்டு கையெடுத்து கும்பிடுகிறார்.
இனி வரும் எபிசோட்களில் நாச்சியப்பன் குடும்பத்தினர் குணசேகரனுக்கு உதவி செய்வார்களா? என என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |