Ethirneechal: சிசிடிவி காட்சியால் சிக்கிய ஜீவானந்தம்... பார்கவியுடன் எஸ்கேப் ஆகியது ஏன்?
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியை காண வந்த பார்கவியுடன் ஜீவானந்தம் எஸ்கேப் ஆகியுள்ளது சிசிடிவி காட்சி மூலம் போலிசார் கண்டுபிடித்துள்ளரன்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றார். அவரின் நிலைக்கு குணசேகரன் தான் காரணம் என்று வீட்டுப்பெண்கள் கண்டிப்பாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே வழக்கினை விசாரித்துக் கொண்டிருந்த கொற்றவை வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், புதிய காவலரை இவ்வழக்கினை விசாரிக்க நியமித்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த போலிசார் அறிவுக்கரசியுடன் சுற்றித்திரிந்த அவரது அண்ணனையும், கரிகாலனையும் போலிசார் அடித்து எடுத்துள்ளனர்.
தற்போது போலிசார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது ஈஸ்வரி உடலில் மாற்றம் ஏற்பட்டதற்கான காரணம் தெரியாமல் மருத்துவர்கள் புலம்பினர்.
இந்நிலையில் பார்கவி ஈஸ்வரியைப் பார்க்க வந்ததும், அவரை யாருக்கும் தெரியாமல் ஜீவானந்தம் அழைத்துச் சென்றதும் பதிவாகியுள்ளது.
ஜீவானந்தம் போன் நம்பரையும் மாற்றியுள்ள நிலையில், அனைத்து சூழ்நிலையும் அவருக்கு எதிராக இருப்பதால் கொலை செய்ய முயற்சி செய்த குணசேகரனை விட்டுவிட்டு ஜீவானந்தத்தை கைது செய்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |