கரிகாலனை வெளுத்து வாங்கிய சக்தி.. யாரும் வெளியில் போகக் கூடாது! ஜனனி போட்ட கண்டிஷன்
எதிர்நீச்சல் சீரியலில் ஆதாரங்களை திருடுவதற்காக சென்ற கரிகாலனை பிடித்து சக்தி அடி வெளுத்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஜனனியும், சக்தியும் ஆதி குணசேகரனுக்கு எதிரான காணொளியை எடுப்பதற்காக வீட்டிலுள்ளவர்களிடம் கூறி விட்டு வெளியில் செல்கிறார்கள்.
ஆனால் இருவரும் நீண்ட நேரமாக காத்திருந்தும் அவர்களுக்கு கெவினின் நண்பன் அஸ்வினி வரவில்லை. ஆனாலும் அந்த ஆதாரங்களின் இன்னொரு நகல் ஜனனி, சக்தி இருவரின் கைக்கு வரும் என எதிர்ப்பார்த்த வேளையில், மூன்றாவதாக உள்ளே வந்த நபர் ஒருவர் ஆதாரங்களை பணம் கொடுத்து வாங்குகிறார்.
கண்டிஷன் போட்ட கதிர்
இந்த நிலையில், குணசேகரன் பற்றிய ஆதாரங்களை அடுத்தடுத்து திரட்டிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஆதாரங்களை திருடிவிடலாம் என்ற நோக்கத்தில் மாடிக்கு வந்த கரிகாலனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கரிகாலனை கண்டுபிடித்து சக்தி அடிக்கிறார். அதே சமயம் கோபமான கதிர், இனி யாரும் வெளியில் செல்லக் கூடாது என கண்டிஷன் போடுகிறார்.
மறுநாள் காலையில் தலைதீபாவளிக்கு ஆடைகளை வாங்குவதற்காக வெளியில் செல்லும் பொழுது, விசாலாட்சி தடையாக நிற்கிறார். இப்படியாக சீரியல் கொஞ்சம் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
புதிய மருமகள் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு வாழ்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |