Ethirneechal: கதறித் துடித்த கரிகாலன்! தீபாவளி கொண்டாட்டத்தில் நடந்த விபரீதம்
எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலன் தீபாவளி கொண்டாட்டத்திற்காக பட்டாசு வைக்கும் போது எதிர்பாராத விபத்தில் சிக்கியதால் கதறி துடித்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில், ஒருவழியாக தர்ஷன் பார்கவி திருமணத்தினை ஜனனி நடத்தி முடித்துள்ளார்.
ஜனனிக்கு துணையாக சக்தியும் நின்று உதவி செய்த நிலையில், குணசேகரனையும் மிரட்டி திருமணத்தில் கலந்து கொள்ள கூறியுள்ளார்.
இதனால் வீட்டு மருமகள்களிடம் தோற்றுப்போன குணசேகரன் தற்போது வீட்டைவிட்டே வெளியேறியுள்ளார். தற்போது தர்ஷன் பார்கவி இருவருக்கும் தலதீபாவளி என்பதால் வீட்டு மருமகள்கள் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.
மற்றொரு புறம் கதிர், ஞானம், கரிகாலன் மூன்று பேரும் பட்டாசு வெடிக்கின்றனர். பட்டாசு வெடிக்கும் போது ஞானம் வைத்துள்ள புஷ்வானத்தை கவனிக்காமல் கரிகாலன் வெடி வெடிக்க ஆரம்பித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஞானம் வைத்த புஷ்வானம் கரிகாலனின் வேஷ்டிக்குள் தீ கங்குகள் பட்டுள்ளது. இதனால் வேதனையில் தாங்கமுடியாமல் கரிகாலன் அலறி துடிக்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |