எதிர்நீச்சல் ஈஸ்வரியின் அடுத்த நிலை - பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ஈஸ்வரியின் கதாபாத்திரத்திற்கான அடுத்த நிலை என்ன என்பது தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்நீச்சல் சீரியலில்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டு வருகிறது. சின்னத்திரை சீரியல்களில் மிகப்பெரும் வரவேற்பை இந்த சீரியல் பெற்றுள்ளது.
இதில் குணசேகரனின் கதாபாத்திரத்திற்கு முழு ரசிகர் பட்டாளமுமே உள்ளது. இந்த நிலையில் குணசேகரன் ஈஸ்வரியை தர்ஷன் திருமண விஷயத்திற்காக தாக்கி தற்போது அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் இருக்கிறார்.
இது தொடர்பில் ரசிகர்கள் இனி ஈஸ்வரி கதாபாத்திரத்தில் கன்னினா நடிக்க மாட்டார் என கருத்து பதிவிட்டு வந்தனர். இது தொடர்பில் இன்னுமொரு தகவல் கிடைத்துள்ளது.

கனிகாவின் அடுத்த பிளான் என்ன?
ஈஸ்வரி கதாபாத்திரத்திற்குப் பதிலாக வேறொரு நடிகை ஒப்பந்தம் செய்யப்படலாம் அல்லது அந்தக் கதாபாத்திரம் முடிவுக்கு வரலாம் எனப் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், கனிகா தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி, அதன் படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் அவர் மீண்டும் 'எதிர்நீச்சல்' தொடருக்குத் திரும்பப்போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. வெள்ளித்திரையில் மீண்டும் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ள கனிகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஈஸ்வரி கதாபாத்திரத்தை ஈடு செய்யப்போகும் அந்தப் புதிய நடிகை யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |