தமிழா தமிழா: பெண் வேடம் அணிந்து நடிக்கும் மகன்... கண்ணீர் மல்க பேசிய தாய்!
இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்யில் நாட்டுப்புற கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கலைஞர்களின் வாழ்க்கை எப்படி உள்ளது? கலைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் எனும் தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற ஒரு நாட்டுப்புற கலைஞரின் தாய் தன் மகன் பெண் வேடம் அணிந்து நடிப்பதால் ஊரே அவனை இழிவாக பேசினாலும், எனக்கு அவனை நினைத்து பெருமையாகத்தான் இருக்கின்றது என அரங்கத்தில் கண்ணீர் மல்ல பேசிய காணொளி இணையத்தில் வைராலாகி வருகின்றது.

தமிழா தமிழா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் மிகையாகாது.

இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் வாரம் தோறும் நடைபெற்று வருகின்றது.
அந்தவயைில், இந்த வாரம் நாட்டுப்புற கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கலைஞர்களின் வாழ்க்கை எப்படி உள்ளது? கலைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் எனும் தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன் சில நெகிழ்ச்சியான தருணத்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |