ஜனனியை கோர்த்து விட்ட குணசேகரன்.. ஜீவானந்தம் கொடுத்த ஆதாரம்- கதைக்களம் மாறுகிறது!
ஈஸ்வரி விவாகரத்தில் ஜனனி கைது செய்யப்படுவது போன்று குணசேகரன் கதையை மாற்றி கூறுகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஈஸ்வரிக்கு தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை தாக்கிய குணசேகரன் எந்தவித சலனமும் இல்லாமல் வீட்டிலுள்ள மற்ற பெண்கள் மீது பழி போடுகிறார். இந்த விவாகரத்தின் விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
அதற்கு தர்ஷன் மற்றும் தர்ஷினி இருவரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் பரபரப்பாக தேடி வருகிறார்கள். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரி, குணசேகரனுக்கு தெரிந்தவர் என்பதால், விசாரணை தற்போது ஜனனி பக்கம் திரும்பியுள்ளது.
வசமாக சிக்கிய பார்கவி
அவர் ஜனனியை விசாரிக்க மருத்துவமனைக்கு சென்று அவருடன் வீட்டிற்கு வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது, பார்கவி ஈஸ்வரியை பார்க்க அவரது அறைக்கு சென்றது அந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
அதன்பின்னர் அந்த அறையில் இருந்து பார்கவியை ஜீவானந்தம் அழைத்து செல்கிறார். இதனால் ஜீவானந்தமும், பார்கவியும் தான் ஈஸ்வரியை ஏதோ செய்திருக்கிறார்கள் என பொலிஸ் சந்தேகப்படுகின்றனர்.
விசாரணை தங்கள் பக்கம் திரும்ப என்ன காரணம் என தெரியாமல் தவிக்கும் ஜனனி இனி என்ன செய்வார் வீட்டிலுள்ள மற்ற பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கைது செய்யப்படும் ஜனனி
இந்த நிலையில், ஆதி குணசேகரன் வீட்டில் ஜனனி இருக்கும் பொழுது, ஜீவானந்தம் கோல் செய்து,“ என்னை கொஞ்சம் நாட்களுக்கு சந்திக்க முடியாது. ஆனாலும் முயற்சியை தொடருங்கள்..” என்கிறார்.
இதனை வாய்ப்பாக பயன்படுத்திய குணசேகரன், “ இவளுகளும் அந்த ஜீவானந்தமும் சேர்ந்துக்கிட்டு என்னுடைய குடும்பத்தை காலிபண்ண திட்டமிடுகிறார்கள்..” என கதைக்களத்தை மாற்றியுள்ளார். இதனால் பொலிஸ் அதிகாரி ஜனனி மீது தான் தப்பு இருப்பதாக கூறி அவரை கைது செய்து அழைத்து செல்கிறார்கள்.
இந்த சூழ்ச்சியில் இருந்து ஜனனி எப்படி தப்பிக்கப் போகிறார்? ஆதி குணசேகரனை ஜனனி சிக்க வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
