Ethirneechal: கைமாறிய குணசேகரனின் சொத்து... பேரதிர்ச்சியில் ஒட்டுமொத்த குடும்பம்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தனது சொத்தை கதிருக்கு எழுதி வைப்பது போன்று ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகியது. இதில் குணசேகரனாக நடித்த மாரிமுத்து திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த பின்பு இந்த சீரியலின் கதை மிக விரைவில் நிறுத்தப்பட்டது.
பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்த வந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் வீட்டு பெண்கள் எந்தவொரு பயமும் இல்லாமல் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கின்றனர். இந்நிலையில் குணசேகரன் சொத்து கைமாறியுள்ளது போன்று காட்டப்படுகின்றது.
அதாவது கதிருக்கு தனது சொத்தை எழுதி வைத்துள்ளது போன்றும் ப்ரொமோவில் வெளியாகியுள்ளது. இதற்கு பின்பு கதையின் போக்கு என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |