Ethirneechal: பார்கவி, ஜீவானந்தத்தை கொலை செய்ய திட்டம்! கதையில் ஏற்படும் திருப்பம் என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவி மற்றும் ஜீவானந்தத்தை கொலை செய்வதற்கு அறிவுக்கரசி திட்டம் தீட்டி ஆட்களை வரவழைத்துள்ள காட்சி நடைபெற்றுள்ளது.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த நிலையில், தற்போது திருமணம் நின்று போயுள்ளது.
தர்ஷன் காதலித்த பெண்ணான பார்கவியின் தந்தையை குணசேகரன், அறிவுக்கரசி ஆட்கள் அடித்தே கொலை செய்துள்ளனர்.
இதனால் பொங்கி எழுந்த குடும்ப பெண்கள், நீதிமன்றம் வரை சென்றுள்ளனர். இதனால் குறித்த வழக்கிலிருந்து தப்பிக்க அறிவுக்கரசி ஆட்களை அனுப்பி ஜீவானந்தம் மற்றும் பார்கவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
பார்கவியை நீதிமன்றத்திற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து வரும் ஜீவானந்தம் இவர்களிடமிருந்து தப்பிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |