ஆதாரங்களை கொடு.. குணசேகரனின் கடைசி எச்சரிக்கை- கதிகலங்கி நிற்கும் தம்பதி
மருமகள்களின் ஆட்டத்திற்கு முடிவுக்கட்ட நினைத்த குணசேகரன் துப்பாக்கியுடன் வந்து, ஜனனிக்கு கடைசி எச்சரிக்கை விடுக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் தர்ஷன் தான் காதலித்த பார்கவியை பல தடைகளுக்கு மத்தியில் திருமணம் செய்திருக்கிறார். இவர்கள் வாழ ஆரம்பிக்கும் முன்னரே விசாலாட்சி அன்புக்கரசியை அழைத்து வந்து வீட்டில் வைத்துக் கொண்டு, “அவள் இங்கு தான் இனி இருப்பாள்..” என நாடகம் போட ஆரம்பித்துள்ளார்.
ஜனனியின் ஆட்டத்திற்கு முடிவுக்கட்ட நினைக்கும் குணசேகரன் தன்னுடைய அடுத்தடுத்த திட்டங்கள் குறித்த கதிருக்கு தொலைபேசியில் அறிவிக்கிறார்.

நான்கு நாட்களில் அனைவரின் ஆட்டத்திற்கு முடிவுக்கட்ட நினைக்கும் குணசேகரன் ஜனனி, சக்தி இருவரும் வீட்டை விட்டு நகராதப்படி பார்த்துக் கொள்வதற்காக ஒரு திட்டத்தை போட்டு அன்புக்கரசியை உள்ளே கொண்டு வருகிறார்கள்.
ஜனனியை கொன்று விடுவாரா?
இந்த நிலையில், ஜனனியிடம் உள்ள கடதாசி விடயம் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரிந்து விடுகிறது. அதனை தரும்படி கதிர் கேட்க சக்தி மறுக்கிறார்.
இதனை தொடர்ந்து துப்பாக்கியுடன் வந்த குணசேகரன் ஜனனியிடம், “ நீ நாளைக்குள்ள அவ்வளவு ஆதாரங்களையும் கொடுத்து விட்டு, திரும்பி பார்க்காமல் ஓடி விட வேண்டும். இல்லாவிட்டால் உனக்கும் உன்னுடைய கணவருக்கும் கருமாதி செய்து விடுவேன்..” என கொலை மிரட்டல் விடுகிறார்.

வீடியோ ஆதாரங்களை கொண்டு வரும் இளைஞரையும் இறுதியாக துப்பாக்கியால் சுட்டிக் கொலை செய்கிறார்கள். இவ்வளவு பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியலில், ஜனனி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |