அடி மேல அடி கொடுத்த ஜீவானந்தம்... சுருண்டு விழுந்த குணசேகரன்! பரபரப்பு ப்ரொமோ
எதிர்நீச்சல் சீரியலில் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக வலம்வரும் குணசேகரன் நெஞ்சுவலியால் கீழே சுருண்டு விழுந்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் 40 சதவீதம் ஷேர் தற்போது ஜீவானந்தத்திற்கு சென்றுள்ளது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத குணசேகரன், ஜனனி பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர். கடைசியில் ஏற்பட்ட மோதலில் குணசேகரனை அலுவலகத்திலிருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டதுடன், காவல்நிலையம் வரை சென்று வந்துள்ளார்.
எப்பொழுதும் கம்பீரமாக காட்சியளிக்கும் குணசேகரனின் தற்போதைய நிலை ரசிகர்களிடையே மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆடிட்டர் வந்து சில விடயங்களைக் கூறிய நிலையில் இதனைக் கேட்ட குணசேகரன் திடீரென நெஞ்சுவலியால் துடித்துள்ளார். உடனே தோளில் தூக்கிப் போட்டு அவரது தம்பி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.