Banana For Skin: முகத்தை ஜொலிக்க வைக்கும் வாழைப்பழம்
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது, உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்குவது மட்டுமின்றி முடி மற்றும் தோலின் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.
இதனை Face packஆக பயன்படுத்தும் போது முகத்தை சுருக்கங்கள் ஏதுமின்றி பளபளப்பாக்குகிறது,
இந்த பதிவில் இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? எப்படி பயன்படுத்தலாம்? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழம் ஏன்?
வாழைப்பழத்தை முகத்திற்கு பயன்படுத்தும் போது கொலோஜென் உற்பத்தியை அதிகரிக்கும், இது உங்கள் முகத்தை நீரேற்றத்துடன் மற்றும் மென்மையாக வைக்கிறது.
வயதாகும் போது தோலில் கொலோஜன் உற்பத்தி குறைவது சாதாரணமான ஒன்று தான், இதனால் தோலில் சுருக்கங்கள் உண்டாகலாம்.

வாழைப்பழத்தில் உள்ள சிலிக்கா, கொலோஜென் உற்பத்திக்கு துணைபுரிவதால் முகம் பளபளப்பாகும்.
இதுமட்டுமின்றி வாழைப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகள், உடலில் உள்ள ப்ரீராடிக்கல்ஸை எதிர்த்து போராடுகிறது.
Banana Face Mask
எண்ணெய் சருமமாக இருந்தால், வாழைப்பழத்துடன் எலுமிச்சை நீர் அல்லது தேன் சேர்த்து பயன்படுத்தலாம்.
வறண்ட சருமமாக இருந்தால், வாழைப்பழத்துடன் அவகோடா எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம்.
வாழைப்பழத்துடன் தயிர் சேர்த்து பயன்படுத்துவதும் சிறந்த பலனை தரும்.