Ethirneechal: நீண்ட வருட ப்ளாஷ்பேக் வெளியானது... நேருக்கு நேர் தேவகியை மிரட்டிய குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ள ஃளாஷ்பேக் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கின்றது. சக்தி உண்மையைத் தேடி ராமேஷ்வரம் சென்றுள்ளார்.
ஆனால் தனது உண்மை வெளியே வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் குணசேகரன் சக்தியை கொலை செய்வதற்கு ஆட்களையும் அனுப்பியுள்ளார்.

யார் இந்த தேவகி என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அதாவது குணசேகரன் அப்பாவான ஆதிமுத்துவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர் தான் தேவகி.
ஆனால் தனக்கு முதலில் திருமணம் ஆகிவிட்டது என்பதை மறைத்து குணசேகரனின் அப்பா தேவகியை திருமணம் செய்துள்ளார். மேலும் ஆதிமுத்துவிற்கு பிறந்த ஒரு மகனும் இருக்கின்றார்.
இளம்வயதில் இருக்கும் குணசேகரன் நேரடியாக தேவகியிடம் வந்து தனது அப்பாவை விட்டு செல்லுமாறு கொலை மிரட்டல் வைத்துள்ளார்.
அதற்கு தேவகி தனது சொத்துக்களை வாங்கிவிட்டு, தன்னை இவ்வாறு திருமணம் செய்து ஏமாற்றியதாக கூறி அழுகின்றார்.
ஆனால் எதையும் ஏற்றுக்கொள்ளாத குணசேகரன் இனி இந்த ஊர்லயே இருக்கக்கூடாது என்று மிரட்டிச் செல்கின்றார். குணசேகரனின் மிரட்டலை தேவகியுடன் நிற்கும் அவரது மகனும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
தற்போது வெளியாகியுள்ள இந்த ப்ரியூ ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஏற்படுத்தியுள்ளது. கதைகளமும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |