நடனத்தில் பொழந்து கட்டும் எதிர்நீச்சல் நந்தினி.. குடும்ப பெண்ணாக வந்தவரா இப்படி?
எதிர்நீச்சல் சீரியலில் குடும்ப பெண் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹரி பிரியா, அஸ்வத்துடன் நடனத்தில் வீடு கட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடும் சீரியல் தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் ஒரு குடும்பத்தில் பெண்களை அடிமையாக்கி கணவர்கள் செய்யும் சேட்டைகளை அழகாக காட்டி வருகிறார். இந்த சீரியலில் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இதன்படி, குணசேகரனாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய மவுசு இருக்கிறது.
மேலும் எதிர்நீச்சல் என்றாலே டுவிஸ்ட்கள் நிறைந்திருப்பதால் அடுத்தடுத்து என்ன திருப்பங்கள் வரப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
என்னவொரு ஆட்டம்
இந்த நிலையில் இந்த சீரியலில் நந்தனி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை ஹரிப்பிரியா சீரியலில் எப்படி ஆக்டிவாக இருக்கிறாரோ அதன்போன்று சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
அந்த வகையில், நிகழ்ச்சி தொகுப்பாளர் அஸ்வத் உடன் சேர்ந்து நந்தினி குத்தாட்டம் போட்ட காணொளி இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது.
“சீரியலில் குடும்ப பெண்ணாகவும், தன்னுடைய உரிமைக்காக போராடும் பெண்ணாகவும் இருக்கும் நந்தினி இப்படி குத்தாட்டம் போடுவாரா?” என நெட்டிசன்கள் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.