Ethirneechal: திருமணத்திற்கு தலையாட்டிய தர்ஷினி! தவிக்கும் ஈஸ்வரி
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி திருமணத்திற்கு தலை ஆட்டிய நிலையில் ஈஸ்வரி செய்வதறியாது தவித்து வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.
திருமணத்திற்கு சம்மதம் சொன்ன தர்ஷினி
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.
தர்ஷினி குணசேகரன் வீட்டில் இருக்கும் நிலையில் தற்போது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். மற்றொரு புறம் ஜனனி தனது தங்கையின் காதலை சேர்த்து வைக்க முயற்சித்து வருகின்றார்.
இதனிடையே காட்டில் கத்திக்குத்து பட்ட ஜீவானந்தம் என்ன ஆனார் என்பது தெரியாமல் கதை செல்கின்றது.
தர்ஷன், தர்ஷினி இருவரும் ஈஸ்வரிக்கு எதிராக மாறியுள்ள நிலையில், ஈஸ்வரி செய்தறியாது நிலைகுலைந்து நிற்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |