எதிர்நீச்சல் நந்தினி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா? கணவரை விவாகரத்து செய்தது ஏன்?
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹரிப்ரியா தனது விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.
நடிகை ஹரிப்ரியா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹரிப்ரியா. தனது நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் பயங்கர பிரபலமாகியுள்ளார்.
இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், திடீரென்று விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இவர்களின் விவாகரத்திற்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில், ஹரிப்ரியா பேட்டி ஒன்றில் பேசியது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து பெற்றது ஏன்?
ஹரிப்ரியா கூறுகையில், தனிமை தான் எனது நண்பன் என்றும் தனிமையாக இருப்பதை தான் விரும்புவதாகவும், நாள் முழுவதும் தனியாக இருந்து பாடல் கேட்டு, புத்தகம் படித்துக் கொண்டு தான் இருப்பதுடன், அப்பொழுது தான் தன்னை உணர்வதாக கூறியுள்ளார்.
வாழ்க்கையில் கசப்பான மனிதர்களை சந்திக்கும் சூழ்நிலை அனைவருக்கும் வரும் அதையும் தாண்டியே தான் வந்ததாகவும், அத்தருணத்தில் மிகுந்த மன தைரியத்துடன் இருக்க வேண்டும்.
எதிர்நீச்சல் சீரியலில் வரும் குணசேகரன், கதிர் போன்ற பலரும் இருக்கின்றனர். இவர்களை தாண்டியே பெண்கள் வெளியில் வர வேண்டும்.
ஆண்களுக்கு நிகராக பெண்கள் எதையும் செய்யலாம் என்று இருந்தாலும், அவரவர்களுக்கு பிடித்ததை செய்யும் உரிமையைத் தான் நான் உண்மையான சம உரிமையாக பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |