Ethirneechal: தல தீபாவளிக்கு தயாரான தர்ஷன், பார்கவி! சதி திட்டம் தீட்டும் குடும்பம்
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவிக்கு தல தீபாவளி என்பதால் ஜீவானந்தம் அவருக்காக பார்சல் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தற்போது காணாமல் போயுள்ளார். அறிவுக்கரசியே தனக்கு எதிராக நின்றுள்ள நிலையில், அவரை சிறைக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் ஜனனி தனது கையில் இருந்த காணொளியினை வைத்து தர்ஷன் பார்கவி திருமணத்தினை மிகவும் சிறப்பாக முடித்துள்ளார்.
இதனால் வீட்டு மருமகளிடம் தோற்றுப்போன விரக்தியில் குணசேகரன் வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். இந்நிலையில் பார்கவிக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது.
தல தீபாவளி என்பதால் ஜீவானந்தம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் வெண்பாவை பார்ப்பதற்கு தான் அங்கு வருவதாக பார்கவி ஜீவானந்தத்திடம் கூறியுள்ளார்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து இது உனக்கு தல தீபாவளி என்று கூறியுள்ளார். தர்ஷன், பார்கவி தீபாவளி கொண்டாட்டத்தினைக் கெடுப்பதற்கு அடுத்த சதி திட்டத்தினை கதிர் செய்து வருகின்றார்.