இன்று சனி (23, 2026)பகவானின் விஷ யோகம் - எந்த ராசிகளுக்கு எச்சரிக்கை தேவை?
ஜோதிடத்தின்படி, இந்த ஆண்டு வசந்த பஞ்சமி ஜனவரி 23, 2026 அன்று வருகிறது. அன்றைய தினம் விஷ யோகமும் உருவாகிறது. இந்த யோகம் சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப்போகின்றது.
விஷ யோகம்
ஆரம்மாகி இருக்கும் இந்த புத்தாண்டில் பல கிரக பெயர்ச்சிகளும் இடம்பெறும். சனி பகவான் கிரகங்களில் முக்கியமாக இருக்கிறார். இவரின் கிரகப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் மிகவும் முக்கியமாகும்.
இந்த நிலையில் ஜனவரி 23, 2026 வசந்த பஞ்சமி அன்று, சனி சந்திரன் சேர்க்கையால் மீனத்தில் விஷ யோகம் உருவாகிறது. வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவியை வழிபடுவது பக்தர்களின் கலைகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதோடு, தொழில் வெற்றிக்கான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
வசந்த பஞ்சமி சரஸ்வதி தேவிக்கு உகந்த நாள் என்றாலும், விஷ யோகம் உருவாவதால் சில ராசிகளுக்கு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

ரிஷபம்
- விஷ யோகம் காரணமாக ரிஷப ராசியினர் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
- குறிப்பாக ரிஷப ராசிக்காரர்கள் வேலையில் அதிக சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.
- அடுத்த சில தினங்களுக்கு அவர்கள் நிதிப் பிரச்சனைகளை வரும்.
- கணவன் மனைவி அல்லது குடும்ப உறவுகளிடையே கருத்து வேறுபாடு வரும்.
- இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் வசந்த பஞ்சமியன்று சரஸ்வதி தேவிக்கு தேங்காய் மற்றும் மஞ்சள் வஸ்திரம் படைத்து வழிபடுவது நல்லது.
சிம்மம்
- சிம்ம ராசியினருக்கு இந்த காலக்கட்டம் வேலையில் பல சோதனையான காலக்கட்டத்தை கொடுக்கும்.
- தற்போது இருக்கும் வேலையில் சிக்கல்கள் அல்லது வேலை பறிபோகுதல் போன்றவை நடக்கும்.
- மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எனவே இந்த நேரத்தில் பொறுமையை கடைவிட வேண்டாம்.
- இந்த நேரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். 'ஓம் சரஸ்வதி தேவி நமோ நமஹ' மந்திரத்தை 108 முறை சொல்வது பிரச்சனைகளை குறைக்க உதவும்.
விருச்சிகம்
- விருச்சிக ராசிக்கு இது கடினமான காலமாகும். அடுத்த சில தினங்கள் சிரமங்கள் நிறைந்ததாக இருக்கலாம்.
- சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
- குடும்பத்தில் தேவையில்லாத தகராறுகள் ஏற்படும்.
- திடீர் மருத்துவ செலவுகள் அல்லது எதிர்பாராத செலவுகள் காரணமாக உங்கள் நிதி நிலைமை மோசமடையும்.
- வசந்த பஞ்சமி நாளில் மஞ்சள் பொருட்களை தானம் செய்வது விருப்பங்களை நிறைவேற்றும் ஏற்படும் தடங்கல்களிருந்து விடுபட உதவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).