திருமணம் நடக்காது.. தீர்க்கமான முடிவில் தர்ஷன்- வேட்டையை ஆரம்பித்த மருமகள்கள்
தன்னுடைய அம்மாவின் உடலநலம் சரியாகும் வரை இந்த திருமணம் நடக்காது என தர்ஷன் தற்போதைக்கு திருமணத்தை தள்ளி வைத்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் 'எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் குணசேகரன், மகனின் திருமணத்திற்கு தடையாக இருக்கும் ஈஸ்வரியை கொலைச் செய்யும் முயற்சியில் அவருடைய தலையில் அடித்து படுத்த படுக்கையாக்கியுள்ளார்.
தன்னுடைய மகனின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என ஆசைப்பட்ட ஈஸ்வரியின் நிலையை பார்த்து மற்ற மருமகள்கள் கவலையடைந்துள்ளனர். அவர்களின் அழுகை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஈஸ்வரியை காண தர்ஷன் மற்றும் விசாலாட்சி இருவரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் குணசேகரன் அவர்களை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை.
திருமணம் நடக்காது..
இந்த நிலையில், தன்னுடைய அம்மாவை பார்க்க அனுமதி தராவிட்டால் என்னுடைய திருமணம் நடக்காது என தர்ஷன் புது பிரச்சினையை கிளப்பியுள்ளார். அத்துடன் தன்னுடைய அண்ணிக்கு இப்படியானதை நினைத்து வருந்தும் சக்தி மறுபடியும் ஜனனிக்கு ஆதரவாக நிற்கிறார்.
குணசேகரன் இந்த பிரச்சினையை எப்படியாவது பெண்கள் பக்கம் திருப்பி விட வேண்டும் என அவருடைய பணப்பலத்தை வைத்து யோசிக்கிறார். தான் செய்வது தவறு என தெரிந்தாலும், அதனை காட்டிக் கொள்ளாது பெண்களை எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற முயற்சியில் கதைக்களம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், ஜனனி தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யார் வெற்றிப் பெறுவார்கள்? உண்மை வெளிவருமா? என்பதை காண சின்னத்திரை ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.