எதிர்நீச்சலில் அப்பத்தா கதை முடிந்ததா? கதறியழுத ஜனனி எடுத்த சபதம்
எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் குணசேகரன் காணாமல் போனது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை தெரியவந்ததிலிருந்து குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பினால் மாரிமுத்து உயிரிழந்தார். இதனால் உச்சத்தில் இருந்த சீரியல் தற்போது சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
தற்போது அப்பத்தாவை தீர்த்து கட்ட முடிவு செய்து குணசேகரன் ஆட்கள் பிளான் போட்டு செய்த காரியத்தால் அப்பத்தா உயிருக்கு போராடி வந்தார்.
அப்பத்தாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் காரை நோக்கி சிலர் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். யார் என்று காரை விட்டு எல்லோரும் இறங்கி நின்று பார்க்கும் போது அப்பத்தா இருக்கும் கார் குண்டு வெடித்து சிதறுகிறது.
காரில் இருந்து கிடைத்த சின்ன சின்ன பாகங்களையும், சாம்பலையும் எடுத்துக்கொண்டு கங்கையில் கரைப்பதற்காக குணசேகரன் சென்றிருப்பதாக ஞானம் சொல்கிறார்.
அப்பத்தாவை நினைத்து குடும்பமே அழுதுள்ள நிலையில், ஜனனி அப்பத்தாவை கொன்றவர்களை கண்டுபிடிப்பதாக சதபம் எடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |