விஷ்னுவுக்கு காதலை தெரிவித்த பூர்ணிமா : மாயாவின் அடுத்த Target விஷ்னுவா?
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தமிழ் 7' நிகழ்ச்சியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போட்டியாளர்கள் மத்தியில் காதல் எழுந்து வரும் நிலையில், தற்போது பூர்ணிமாவிற்கு விஷ்னு மீது காதல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Bigg Boss Season 7
உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ந்து வந்தது. இதையடுத்து 7வது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
இதில் போட்டியாளராக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர்.
இங்கு காதல் ஜோடிகளாக மணி, ரவீனா மற்றும் நிக்சன், ஐஷு காதலித்து வந்ததாக தெரியவந்தது.
இதையடுத்து தற்போது பூர்ணிமா விஷ்னுவிற்கு தனது காதலை தெரிவித்துள்ளார்.
பூர்ணிமா + விஷ்னு காதல்
தற்போது பூர்ணிமா விஷ்னுவிற்கு தனது காதலை தெரிவித்துள்ளார்.
எனக்கு உங்கள பிடித்து இருக்கு. உங்க மேல Feelings உம் இருக்கும். நீங்க யோசித்து சொல்லுங்க என்று பூர்ணிமா கூறியுள்ளார்.
இது மாயாவின் திட்டமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |