முதன் முதலாக குணசேகரனுடன் நேருக்கு நேர் மோதிய கதிர்: எதிர்பாராத தருணங்கள் ப்ரோமோவில்...
எதிர்நீச்சல் சீரியல் தற்போது விறுவிறுப்பாக நகர்ந்துக் கொண்டிருக்கின்ற வேளையில், யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக ஆதிகுணசேகரனிடம் கதிர் முகத்திற்கு எதிராக எதிர்த்துக் கொண்ட காட்சி ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். இந்த சீரியலில் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் அசத்தலான நடிப்பைக் கொடுத்து இந்த சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
குணசேகரை எதிர்த்த கதிர்
இந்நிலையில், இன்றைய ப்ரோமோ காட்சியில் ஜீவானந்தனின் மனைவியைக் கொலை செய்து விட்டு வீடு திரும்பிய கதிரைப் பார்த்து சட்டையைப்பிடித்து நீங்க செத்து பிணமாகத் தான் வருவீங்கனு சொன்னாங்க என்று சொல்லி அழுகிறாள்.
இதனைக் கேட்டதும் கடும் கோபத்தில் தோல் பட்டையைத் தூக்கிக் கொண்டு முதன் முறையாக ஆதிகுணசேகரனை எதிர்த்து பேசும் சூப்பரான காட்சிகள் ப்ரோவாக வெளியாகியிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |