chanakya topic: இந்த குணங்கள் இருந்தால் அதி புத்திசாலிகளாம்... உங்களிடமும் இருக்கா?
முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த கொள்கைகள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.இதனை பின்பற்றிய பலரும் வாழ்வில் வெற்றியடைந்தமைக்கான சான்றுகளும் இருக்கின்றன.
அந்தவகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அதி புத்திசாலிகளாக மாறுவதற்கு நம்மிடம் அவசியம் இருக்க வேண்டிய குணம் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிபுத்திசாலிகளின் குணங்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம் அதிபுத்திசாலிகளாக மாற வேண்டும் என்றால் முக்கியமாக குடும்ப ரகசியங்களை வெளியே சொல்லும் குணம் இருக்கவே கூடாது.
புத்திசாலிகள் தங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை வெளியில் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
குடும்ப பிரச்சினைகளை வெளியில் சொல்வதால் அதனை நமக்கு எதிரான ஆயுதமாக பலரும் பயன்படுத்தக்கூடும். இதனால் புத்திசாலிகள் எப்போதும் குடும்ப விடயங்களை ரகசியமாக வைத்திருக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
சாணக்கியரிக் கருத்துப்படி அதிபுத்திசாலிகளுக்கு ஒருபோதும் வதந்திகளை நம்பும் குணம் இருப்பதில்லை. அதே சமயம் அவர்களுக்கு வதந்திகளை பரப்பும் குணமும் அறவே இருக்காது.
ஆதாரமற்ற தகவல்களை நம்புவதும் அவ்வாறாக தகவல்களை பரப்புவதும் வாழ்வில் ஏறாளமான பிரச்சினைகளுக்கு காரணமாக அமையும் என்பதை அறிந்து அதிலிருந்து விலகியிருப்பதற்கு அதிபுத்திசாலித்தனம் தேவை என்கின்றார் சாணக்கியர்.
சாணக்கியரின் கூற்றுப்படி உணவை குறைகூறும் குணம் இல்லாதவர்கள் அதிபுத்திசாலிகள் என்கின்றார். இது ஞானிகளின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது.
உணவு விஷயத்தில் அவர்களுக்கு எந்த புகாரும் இல்லாதவர்கள் வாழ்வில் திருப்தியாக வாழமுடியும் என்கின்றார். அவர்கள் உணவை எப்போதும் வீணாக்கவும் குறை சொல்லவும் விரும்புவதில்லை.
உணவுக்கு மரியாதை செலுத்தும் குணம் அதிபுத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
சாணக்கியரின் கருத்துப்படி காதல் வாழ்க்கை பற்றிய ரகசியத்தை காக்கும் தன்மை கொண்டவர்கள் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள் என்கின்றார். அதன் பிரகாரம் தன் துணையின் குணத்தை மற்றவர்களிடம் கூறும் குணம் இல்லாதவர்கள் அதி புத்திசாலிகளாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |