குழந்தைக்கு தாயான எரும சாணி ஹரிஜா! என்ன குழந்தை தெரியுமா? ஒரே குஷியில் ரசிகர்கள்
கடந்த சில வருடங்களாக, யூ-ட்யூப் மக்களிடம் வெகுவாக பிரபலமடைந்துள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் தங்களுக்கென சேனலை தொடங்கி அதில் வித விதமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அதில் ’எரும சாணி' ஹரிஜாவும் ஒருவர். தனது நகைச்சுவையான நடிப்பிற்காக ரசிகர்களைக் கவர்ந்த அவர் சாம் ஆண்டன் இயக்கிய '100' படத்திலும் நடித்திருந்தார்.
ஹரிஜா தனது கல்லூரி நண்பரும், காதலருமான அமர் ரமேஷை 2018-ல் திருமணம் செய்துக் கொண்டார். பிப்ரவரியில் தனது வளைகாப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு அவரது கர்ப்பத்தை அறிவித்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஹரிஜாவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது ஹரிஜா தனக்கு குழந்தை பிறந்துள்ள விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அதோடு பாரம்பரிய உடையில் ஹரிஜாவும் அமரும் இருக்கும் ஒரு புதிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த மகாசிவராத்திரியில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.