எருக்கம் பூ கனவில் வந்தால் இவ்வளவு ஆபத்தா? உடனே சிவனுக்கு விளக்கு போடுங்க- கனவு பலிக்காது!
மனிதர்கள் தூங்கும் போது கனவு வருவது இயல்பான விடயமாக பார்க்கப்படுகின்றது.
அப்படி வரும் கனவில் நாம் காணும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் தனித்தனி பலன்கள் இருக்கின்றன.
இவை நம் ஆழ்மனதில் உள்ளவைகளையும், கற்பனைகளையும் கொண்டு விம்பமாக காட்சிக் கொடுக்கிறது.
மேலும், நம் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் விடயங்களை முன்கூட்டியே உணர்த்துவதற்காகவும் சில நேரங்களில் கனவுகள் வரலாம்.
அந்த வகையில் கனவில் பல்வேறுப்பட்ட உருவங்கள், மனிதர்கள், விலங்குகள், இயற்கை உள்ளிட்ட பல விடயங்கள் வரலாம்.
அதே போல் எருக்கன் பூ கனவில் வந்தால் என்ன பலன் என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எருக்கம் பூ கனவில் வந்தால் என்ன நடக்கும்?
நம் கனவில் எருக்கம் பூ வந்தால் அது என்ன வகை என முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனின் எருக்கம் பூவிலே இரண்டு வகையான செடிகள் உள்ளன. இவை பார்ப்பதற்கு வெள்ளை நிற பூக்கள் மற்றும் வெள்ளையும் நீலமும் லைட்டாக பிங்க் நிறம் கலந்த எருக்கன் பூ பூக்களாக இருக்கும். இவை ஒவ்வொன்றுக்கும் தனி தனி பலன்கள் உள்ளன.
1. வெள்ளை நிற பூக்கள்
வெள்ளை நிற எருக்கன் பூ விநாயகருக்கு உகந்ததாக பார்க்கப்படுகின்றது. உங்கள் கனவில் வெள்ளை நிற எருக்கன் பூவை கண்டால் வாழ்வில் முன்னேற்றம் அடைய போகிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு முன் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கலாம்.
இவை அனைத்தும் இனி வரும் காலங்களில் மறைந்து புதிய வாழ்க்கை ஆரம்பிக்கும். இப்படி கனவு வந்தால் உடனே விநாயகர் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி விடுங்கள்.
2. நீல நிற பூக்கள்
உங்களின் கனவில் நீல நிறத்தில் உள்ள எருக்கன் பூ வந்தால் அது சிவனுக்கு உகந்த பூவாக பார்க்கப்படுகின்றது. நீல நிறத்தில் பூக்கும் எருக்கன் பூ கனவில் வந்தால் உங்களுக்கு ஆபத்து வர போகின்றது என்று அர்த்தம்.
ஆனால் இதை நினைத்து கவலைக் கொள்ளாமல் உடனே சிவனுக்கு ஒரு விளக்கு போட வேண்டும். பிரதோஷத்திற்கு தேவையான அர்ச்சனை பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இப்படி செய்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |