மற்றவர் வாழ்க்கையில் எழும்ப முடியாத அவமானத்தை ஏற்படும் 6 நபர்கள்- சாணக்கிய நீதி
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கியரின் கூற்றுப்படி, நாம் சிலருக்கு எப்போதும் உதவக் கூடாது. ஒருவர் அவர் வாழ்க்கையில் கண்ணியத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட சிலருக்கு நாம் எப்போதும் உதவக்கூடாது என சாணக்கியர் கூறுகிறார்.
அப்படி வாழ்க்கையில் யாருகெல்லாம் உதவக் கூடாது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
யாருகெல்லாம் உதவக் கூடாது?
1. சாணக்கியரின் கூற்றுப்படி, பொய் பேசுபவர்களிடம் ஒருபோதும் பழக்கம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனின் அவர்கள் பொய் சொல்லி உதவி வாங்குபவர்களாக இருப்பார்கள். ஆபத்து நேரத்தில் எம்மை வசமாக சிக்க வைத்து விடுவார்கள்.
2. போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு எப்படியான சூழ்நிலை வந்தாலும் நம்பக் கூடாது. அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். முடிந்தவரை அவர்களிடமிருந்து விலகி இருப்பதே வாழ்க்கைக்கு நல்லது. அத்துடன் உங்களின் பெயரையும் வீணாக்கி விடுவார்கள்.
3. தீய எண்ணங்கள் கொண்டவர்களிடம் ஒருபோதும் பழகக் கூடாது. இப்படியானவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை உங்கள் மீது முன்வைக்கலாம். பொறாமை கொண்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் அவர்களிடம் இருப்பதை வைத்து திருப்தி அடைய மாட்டார்கள்.
4. ஒருபோதும் மகிழ்ச்சியற்றவர்களுக்கு உதவக்கூடாது என்று சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. இப்படியானவர்கள் எதிலும் எவரிடத்திலும் திருப்தி அடைவதில்லை. பல்வேறு காரணங்களை கண்டுபிடித்து எப்போதும் புகார் செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் மீதுள்ள தவறை மறைக்க இப்படியான விடயங்களை கையாள்வார்கள்.
5. சாணக்கியரின் கூற்றுப்படி, பாவ செயல்களை செய்பவர்களுக்கு ஒருபோதும் உதவிச் செய்யக் கூடாது.
மற்றவர்களையும் தவறான செயல்களைச் செய்ய வற்புறுத்துவார்கள். இவர்களுக்கு
உதவி செய்தால் அவமானம் ஏற்படும் என்கிறார் சாணக்கியர்.
6. எப்போதும் முட்டாள்களிடமிருந்து விலகி இருப்பது உங்களுக்கு நல்லது. மற்றவர்களின் குறைகளைக் கண்டறிவதில் எப்போதும் பிஸியாக இருப்பார்கள். உலகில் என்ன நடக்கிறது என தெரியாமல் அவர்கள் செய்வது சரி என திரிவார்கள். வாழ்க்கையில் சரியான விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களுக்கு அறிவுரை கூறுவது பயனற்ற செயல்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |