பத்தே நிமிடத்தில் இறால் புளிக்குழம்பு செய்யலாம்... எப்படி தெரியுமா?
இறால் புளிக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- இறால் - கால் கிலோ
- தக்காளி - 2
- பெ.வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 3
- இஞ்சி பூண்டு விழுது -சிறிதளவு
- மிளகாய் தூள் – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- கொத்தமல்லித் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
- புளி – சிறிதளவு
- கடுகு, உளுந்தம் பருப்பு – சிறிதளவு
- கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு
- உப்பு, எண்ணெய் – தேவைக்கு
நீரிழிவு நோயை ஓட ஓட விரட்ட இந்த ஒரு பொருள் போதும்...இரவு முழுக்க ஊற வைத்து வெறும் வயிற்றில் குடிங்க!

செய்முறை
இறாலை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இந்த பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சியை தொடக் கூட கூடாது... மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?

புளியை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளியுங்கள்.
அதனுடன் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்குங்கள்.
ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு ஜோடியாக வந்த ஐக்கி பெர்ரி... இவர் தான் வருங்கால கணவர்!

நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் போட்டு கிளறுங்கள்.
பின்னர் புளிகரைசலை ஊற்றி கிளறிவிடுங்கள்.
பின்னர் இறால் துண்டுகளை போட்டு சிறிதளவு தண்ணீர், போதுமான அளவு உப்பு சேர்த்து கலக்கிவிட்டு மூடி வையுங்கள்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்துவிட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து இறக்குங்கள்.
ருசியான இறால் புளிக்குழம்பு ரெடி.
