மின்னல் வேகத்தில் பறந்த கார்கள் - நடுரோட்டில் சிக்கித் தவித்த பூனைக்குட்டியின் திக்... திக்... நிமிடங்கள்
அவசர உலகத்தில் எல்லாருமே ரொம்ப பிஸியாயிட்டாங்க. யாருக்கும் நிதானமும் இல்லை. ஒரு வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் ஒரு நிமிடம் நம் மனதில் திக்... திக்... என்று இதயம் அடிக்கத் துடித்துவிடுகிறது. அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா...
பிறந்து சில நாட்களே ஆன ஒரு பூனைக் குட்டி நடு ரோட்டில் மாட்டிக் கொள்கிறது. அந்த சாலையில் வாகனங்கள் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு வாகனத்திலிருந்தும் இந்த பூனைக் குட்டி அதிர்ஷ்டவசமாக தப்பி வருகிறது. பூனைக்குட்டியால் நடக்க முடியாமல் தவித்து வந்தது. யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடந்தது. அப்போது எதிரே வந்த ஒரு கார் நிற்கிறது.
காரிலிருந்து வந்த மனிதர் என்ன செய்கிறார் என்று நீங்களே இந்த வீடியோவில் பாருங்க...