செரிமானத்தை மேம்படுத்தும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து அசத்துங்க!
பொதுவாக எல்லா காலங்களிலுமே எளிதாக பெற்றுக்கொள்ளக்கூடிய கத்திரிக்காய், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஒரு குறைந்த கலோரி காய்கறி ஆகும்.
இது இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துவதில் ஆற்றல் காட்டுகின்றது.

மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என போராடுபவர்களுக்க கத்தரைிகாய் ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது. கூடுதலாக, அதன் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் செல்லுலார் சேதத்திற்கு எதிராக பாதுகாப்பு நன்மைகளை வழங்குகிறது.
கத்தரிக்காய் கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, அதிக நார்ச்சத்து மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டின் காரணமாக இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த துணைப்புரிகின்றது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கத்தரிக்காயை பெரும்பாலானவர்கள் தவிர்த்து வருகின்றார்கள். குறிப்பாக சிறுவர்கள் கத்தரிக்காய் என்றாலே ஒதுக்கி வைத்துவிடுகின்றார்கள்.
இந்த பிரச்சினைக்கு முடிவுகட்டி வீட்டில் உள்ள அனைவருரையும் கத்தரிக்காயை கேட்டு சாப்பிடும் அளவுக்கு, அசைவ உணவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எவ்வாறு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 10
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
தேங்காய் துருவல்- அரை கப்
இஞ்சி- 1 துண்டு
பூண்டு - 4 பல்
கடுகு - 1/4 தே.கரண்டி
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
மிளகாய் பொடி - 2 தே.கரண்டி
தனியா பொடி - 1 தே.கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தே.கரண்டி
சீரகம், சோம்பு- 1 தே.கரண்டி
புளி தண்ணீர் - 1 கப்
காய்ந்த மிளகாய் -2
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கீற்று
கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு பொன்நிறமான வதக்கிக்கொள்ள வேண்டும்.
நன்றாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி, பூண்டு வேத்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துவிட்டு, அதனையடுத்து தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி ஆரவிட வேண்டும்.

பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் மாற்றி அதனுடன் தேங்காய் துருவல், சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு கத்திரிக்காய் எடுத்து முழுவதுமாக வெட்டாமல் எக்ஸ் வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் , கறிவேப்பில்லை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் சின்னவெங்காயம் சேர்த்து வதக்கி, இதோடு அரைத்த மசாலா சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிட வேண்டும்.

அதனையடுத்து புளி தண்ணீர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
அதன் பின்பு வதக்கிய கத்திரிக்காயையும் சேர்த்து லேசாக வதக்கி மூடி போட்டு 5 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைக்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் அவ்வளவு தான், அசத்தல் சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |