viral video: எங்க ஊரு எங்க கெத்து.. விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சியில் மெய்சிலிர்க்க வைத்த நடனம்!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க ஊரு எங்க கெத்து.. விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சியில் சிங்கிள் பசங்க, சரிகமப, DJD போட்டியாளர்களாக பங்கேற்று வரும் பெண்கள் ஆதிபராசக்தி, எருமை வடிவத்தில் இருந்த மகிஷாசுரனை அழித்த புராண நிகழ்வை தத்ரூபமாக நடித்து காட்டிய காணொளி இணையத்தில் வைராலாகி வருகின்றது.
விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சி
தமிழ் சின்னத்திரையில் மக்களின் மனங்கவர்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஜீ தமிழ் தொலைக்காட்சி வழங்கி வருகின்றது. அதில் பாடல் நிகழ்ச்சியாக சரிகமப மிகவும் பிரபலமாக உள்ளது.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. தேபோல் ஜீ தமிழில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சிக்கும், DJD நடன நிகழ்சிக்கும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வரும் 'சிங்கிள் பசங்க'. இந்த நிகழ்ச்சிக்கும் தற்போது ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது.
வித்தியாசமான பாணியில், வெற்றிநடை பேட்டுவரும் இந்நிகழ்சியில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா, சரவன், தங்கபாண்டி,புகழ் உள்ளிட்டோருடன் பல சீரியல் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எங்க ஊரு எங்க கெத்து.. விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சியில் சிங்கிள் பசங்க, சரிகமப, DJD போட்டியாளர்களாக பங்கேற்று வரும் பெண்கள் அம்மன் வேடத்தில் ஆடிய மெய்சிலிக்க வைக்கும் நடன காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |