புரியவைக்க இயலாத வலி... பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் காட்டமான பதிவு! குழப்பத்தில் ரசிகர்கள்
பாக்கியலட்சுமி சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கம்பம் மீனா செல்லமுத்து, பெண்களின் நிலை குறித்து கோபத்துடன் தற்போது வெளியிட்டுள்ள நீண்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் 6 ஆறு வருடங்களாக 1000 எப்பிசோடுகளை கடந்து வெற்றியின் உச்சமாக ஓடி சிறப்பாக முடியுற்ற சீரியல் பாக்கியலட்சுமி.
அண்மையில் இனியா-ஆகாஷ் திருமணத்தோடு பாக்கியலட்சுமி சீரியல் சிறப்பாக முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தவர் கம்பம் மீனா செல்லமுத்து.
பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைந்ததன் பின்னர்,அவர் புது தொடர் எதிலும் கமிட் ஆகாமல் இருந்துவருகின்றார்.
இந்நிலையில், அவர் திடீரென சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
அதில் குறிப்பிடுகையில், ஒரு ஆழ்ந்த, தொடர்ச்சியான துரோகத்திற்கு பிறகு மனதில் ஏற்படும் விரக்தி புரியவைக்க இயலாத வலி... துரோகம் செய்பவர்களுக்கு யார் மீது வேண்டும் என்றாலும் காதல், காமம் தோன்றும்.
அவர்களுக்கு அது நிலையான உணர்வு இல்லை. மிருகம் எங்கு உணவு கிடைத்தாலும் போகும். எதை வேண்டும் என்றாலும் திங்கும். அனைத்தையும் மறுத்த நிலையில் அவர்கள் வேண்டுவது ஒரு அமைதியான பிரிவை மட்டும்.
அனைத்து மனிதர்களுக்கும் தனித்து வாழும் உரிமை உண்டு. ஆனால் அது பெண்களுக்கு மட்டும் அவமானத்தின் அடையாளமாய் மாற்றப்பட்டுவிட்டது. துரோகம், இழிவான செயல் அனைத்தையும் செய்துவிட்டு மன்னிப்பு என்று கேட்டவுடன் மன்னிக்கவில்லை என்றால் அவள் தான் சரியில்லாதவள் என்கிறது சமூகம். என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவை பார்த்த நெட்சென்கள் யாரை பற்றி இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார் என குழப்பத்தில் என்னாச்சி மீனா அக்கா என கேள்வியெழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |