ஒரே ராசியில் கைகோர்க்கும் எதிரி கிரகங்கள் - சோதனை வலையில் சிக்கப்போகும் 4 ராசிகள்
துலாம் ராசியானது சூரிய பகவானுக்கு நீச்சம் பெறும் ராசியாக கருதப்படுகிறது. இதனால் சூரியனுக்கு தன் முழு பலத்தையும் இறக்கமுடியாமல் பலவீனத்துடன் இருப்பார்.
இந்த நிலையில் சுக்கிரன் நவம்பர் 2 முதல் துலாம் ராசிக்குள் நுழைந்திருக்கிறார். இது சுக்கிரனின் சொந்த ராசியாகும். இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சூரியன் மற்றும் சுக்கிரன் எதிரெதிர் குணங்கள் கொண்டவர்ளாவர்.
சுக்கிர பகவான் அன்பு, மகிழ்ச்சி, ஆடம்பரம், உறவுகள், சமநிலையை குறிக்கும் கிரகமாகவும், சூரியன் அதிகாரம், தன்னம்பிக்கை, ஈகோ ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகவும் இருக்கின்றனர்.
தற்போது இந்த எதிரி கிரகங்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றது. இதனால் நான்கு ராசிகள் தங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க போகின்றனர் அந்த ராசிகளின் பலன் பற்றி பார்க்கலாம்.

ஒரே ராசியில் கைகோர்க்கும் எதிரி கிரகங்கள்
| மேஷம் | மேஷ ராசிக்காரர்கள் இந்த இரண்டு கிரகங்களின் இணைவால் சில எதிர்மறை பலன்களை அனுபவிக்கலாம். உங்களுக்கு திருமண உறவு மற்றும் தொழில் விடயங்கள் பாதிக்கபடும். உங்களுக்கு சூரிய தாக்கம் அதிகம் இருப்பதால் உறவுகளுடன் பிரச்சனை வரும். இதனால் வாழ்க்கை துணையுடன் அதிக கருத்து வேறுபாடுகள் வரலாம். நீங்கள் இந்த கால கட்டத்தில் யாரையும் நம்பாதீர்கள். நீங்கள் நம்பியவரே உங்களை ஏமாற்றுவார்கள். எந்த வேலையின் நல்ல காரியமாக இருந்தாலும் இப்போது தொடங்காமல் அதை தள்ளி வைப்பது நல்லது. |
| துலாம் | சுக்கிரன் உங்கள் ராசிநாதன் என்பதால் உங்கள் ராசியிலேயே பலத்துடன் இருக்கிறார். இருப்பினும் சூரியனின் சஞ்சாரம் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆரோக்கியத்தில் சில ஏற்ற இறக்கங்களை கொடுக்கலாம். நீங்கள் இந்த கால கட்டத்தில் சில வேலைகளில் பின்னடைவை சந்திப்பீர்கள். அதிகமான மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். வீட்டிலும் வேலையிலும் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். நவம்பர் 2 தொடங்கி நவம்பர் 16 வரை சவாலான நிலையை சந்திக்கலாம். நவம்பர் 16 சூரியன் துலாம் ராசியில் இருந்து வெளியேறி விருச்சிக ராசிக்கு செல்வது வரை நீங்கள் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். |
| மகரம் | மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சூரியன் இணைவு தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் ஏற்படுகிறது. இது தொழிலில் அதிகாரம், பதவி உயர்வுக்கு வழி வகுத்தாலும் பணி சார்ந்த உறவுகளில் ஈகோ மோதல்கள் வரலாம். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் வேலை செய்யும் மேலதிகாரிகளுடன் உங்களுக்கு தேவையற்ற சண்டைகள் வரும். தவறான முடிவுகளை எடுக்கவும் நேரிடலாம். நிதியில் அதள பாதாளத்திற்கு கூட செல்லும் வாய்ப்பு வரும். ஒருவரை கண்மூடித்தனமாக நம்புவது மிகுந்த தீங்கு விளைவிக்கும். |
| கடகம் | சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை கடக ராசியின் நான்காவது வீடான சுக ஸ்தானத்தில் நிகழ்கிறது. இதன் விளைவால் உங்கள் தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆடம்பரத்திற்காக சேர்த்து வைத்ததை செலவு செய்வீர்கள். எப்போதும் எதையாவது நினைத்து யோசித்துக்கொண்டே இருப்பீர்கள். வீட்டுச்சூழலை பேணுவதிலும் தாயின் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அமைதியாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டியது அவசியம். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).