வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடலாமா? இனி இந்த தவறை செய்யாதீங்க
ஆரோக்கியத்தை அதிகமாக கொண்டுள்ள ஆப்பிள் பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது என்னவாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக பழங்களில் முக்கியமானதாக இருக்கும் ஆப்பிள் பழத்தினை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் எடுத்துக் கொள்கின்றனர்.
அதிகமான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள ஆப்பிளை தினமும் எடுத்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்று பலரும் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஆப்பிளை வெறும்வயிற்றில் சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடுவது நல்லதா?
வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் சில உடல்நல பிரச்சனைகள் வரும் என்று கூறப்படுகின்றது.
நிபுணர்களின் கூற்றுப்படி, வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் வரும்.
வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் வயிற்றில் உப்புசம், வாயு பிரச்சனை ஏற்படும். ஏனென்றால் ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம்.
image: iStock.com/ansonmiao
ஆப்பிளில் இயற்கையாகவே சர்க்கரை அதிகம். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
மாலை அல்லது இரவு தூங்கும் முன் ஆப்பிள் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆப்பிள் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |