இந்த பொருட்களை திறந்து வைக்காதீங்க... தீராத வறுமை ஏற்படுமாம்
வீட்டில் எந்தெந்த பொருட்களைத் திறந்து வைத்தால் வறுமையும், துயரமும் வரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. வீட்டில் ஒரு பொருட்களை வெளியே எடுத்துப் போடுவதும், வெளியே இருந்து ஒரு பொருட்களை வீட்டுக்கு கொண்டு வருவது அதிகமாக வாஸ்து பார்க்கப்படுகின்றது.
அது மட்டுமின்றி வீட்டில் சில பொருட்களை மூடி வைக்காமல் திறந்து வைத்தாலும், அது வறுமைக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்த வாஸ்து சாஸ்திரங்கள் வீட்டில் உள்ளவர்களின் மீது ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்குமாம்.
எதையெல்லாம் திறந்து வைக்கக்கூடாது?
புத்தகங்களை படித்த உடன் அதனை மூடி வைக்க வேண்டும். புத்தகங்கள் புதனுடன் தொடர்புடையதால், அது புத்திசாலித்தனம் மற்றும் பேச்சின் காரணியாகும் அறியப்படுகின்றது. இவ்வாறு புத்தகத்தை திறந்து வைத்தால் பலவீனம் ஆகிவிடுமாம்.
இதே போன்று உப்பையும் பயன்படுத்திய உடன் மூடி வைக்க வேண்டும். உப்பு சந்திரனுடன் தொடர்புடையதாக இருப்பதால் அதனை திறந்து வைத்தால், ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருப்பார். இவ்வாறு இருந்தால் திங்கள்கிழமை உப்பு தானம் செய்யலாம்.
பால் பாத்திரத்தையும் திறந்து வைக்கக்கூடாது. பால் சுக்கிரனுடன் தொடர்புடையதால், ஜாகத்தில் சுக்கிரன் பலவீனமடைய வாய்ப்பு உள்ளது. உடல்நலம் மற்றும் நிதி நெருக்கடி பிரச்சனைகள் ஏற்படும்.
இதே போன்று உணவு பொருட்களையும் திறந்து வைக்கக்கூடாது. இவ்வாறு உணவுப்பொருட்கள் திறந்திருந்தால் உணவு மற்றும் பணம் இரண்டிலும் பிரச்சனைகள் ஏற்படும். மேலும் பூச்சிகள், தூசிகள் விழுந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும்.
அலமாரியையும் ஒருபோதும் திறந்து வைக்கக்கூடாது. ஏனெனில் லட்சுமி தேவி உங்கள் மீது கோபப்படுவாராம். அதுமட்டுமின்றி வறுமையும் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |