வங்கி வரும் பெண்களிடம் மொபைல் போனை வாங்கி ஊழியர் செய்த செயல்; சில நாட்களில் காத்திருந்த அதிர்ச்சி!
அமெரிக்கா ஹாரிஸ் கவுண்டியை சேர்ந்தவர் ஜுயன் எஸ்டீபன்(27). இவர் வங்கி ஒன்றில் கிளெர்க் வேலை பார்த்துவந்துள்ளார். இதையடுத்து, ஜுயன் எஸ்டீபன் வேலை பார்த்துவரும் வங்கிக்கு வரும் பெண்களிடம், வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை உங்கள் தொலைபேசியில் பார்க்கவேண்டும் என கூறி ஜுயன் எஸ்டீபன் பெண்களின் போன்களை வாங்கி வந்துள்ளார்.
அதன் பின்னர், பெண்களிடம் இருந்து தான் வாங்கிய தொலைபேசியில் அவர்களின் ஆபாச புகைப்படம் ஏதேனும் உள்ளதா என சோதனை செய்துள்ளார். மேலும், அதில் அவர்களின் படங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை எடுத்துவைத்துக்கொண்டு போனை அவர்களிடம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில், வழக்கம்போல் பெண் ஒருவர் வங்கிக்கு செல்ல, அவரது போனை வாங்கிய ஜுயன் எஸ்டீபன், அந்த பெண்ணின் தொலைபேசியில் இருந்த ஆபாச படங்களை எடுத்துவைத்து, பின்னர் அந்த படங்களை அந்த பெண்ணிற்கு அனுப்பி அவரை மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீசார் ஜுயன் எஸ்டீபனை கைது செய்தனர்.
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் அவர் இதே போன்று பல்வேறு இளம் பெண்களின் ஆபாச புகைப்படங்களை எடுத்து வைத்திருந்ததும், அவர்களை மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.