விந்தணு மூலம் புதிய எலான் மஸ்கை உருவாக்கமா? எலான் மஸ்க் தந்தை வெளியிட்ட பரபரப்பு தகவல்!
தன் உயிரணு மூலம் புதிய எலான் மஸ்க்-ஐ உருவாக்க அவரது தந்தை தெரிவித்திருக்கும் தகவல் உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
டெஸ்லா கார் நிறுவனரான கோடீஸ்வரர் எலான் மஸ்க் சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலால் படித்து, தற்போது உலகபுகழ் பெற்ற ஒரு நிறுவனராக உள்ளார்.
இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
இவரின் அடுத்த கட்ட முயற்சியாக உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
மேலும், உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

புதிய எலான் மஸ்க் உருவாக்கம்
இந்த நிலையில், அவரது தந்தை எர்ரோல் மஸ்க் பேசுகையில், கொலம்பியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தன்னை அணுகியாதகவும், தனது உயிரணு மூலமாக புதிய ஜெனெரேஷன் எலான் மஸ்க்கை உருவாக்க இருப்பதாகவும் கூறியதாக தெரிவித்து இருக்கிறார்.
இது மட்டுமின்றி, அந்நிறுவனம் உயிரணு மூலமாக உயர்தரப் பெண்களை கருவுறச் செய்ய, விந்தணு தானம் செய்ய விரும்புவும், புது எலான் மஸ்க்கை உருவாக்க என்னிடம் ஒத்துழைப்பு கேட்டனர் எனவும், அவர்கள் எனக்கு எந்தப் பணத்தையும் வழங்கவில்லை.

ஆனால் அவர்கள் எனக்கு முதல் வகுப்பு விமான பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குமிடம் மற்றும் அனைத்து வகையான பொருட்களையும் வழங்கியுள்ளனர் எனக்கூறியுள்ளார்.
கடைசியாக எனக்கு இன்னொரு குழந்தை கிடைக்கும் என்றால் அதை நான் செய்வேன் என பேசி உலகம் முழுவதும் இருக்கும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் அவரின் தந்தை.