ஒரே நாளில் இத்தனை லட்சம் கோடியில் லாபம் ஈட்டிய எலான் மஸ்க்.. எப்படி தெரியுமா?
உலகின் நெம்பர் ஒன் பணக்காரராக இருந்தவர் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். இவர், கடந்த சில வாரங்களாகவே அவரது சொத்து மதிப்பு சரிவை சந்தித்து வந்தது. அதன் காரணமாக நெம்பர் ஒன் இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட மஸ்க் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும், டெஸ்லாவின் பங்குகளில் ஏற்பட்ட சரிவே இதற்கு முதல் காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அதே டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கொடுத்த ஏற்றத்தின் மூலம் ஒரே நாளில் தனது சொத்து மதிப்பில் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்த்து உலகின் இரண்டாவது பணக்காரராகியுள்ளார் மஸ்க்.
தற்போது அவரது சொத்து மதிப்பு 174 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
டெஸ்லாவின் பங்குகள் 19.6 சதவிகிதம் பங்குச்சந்தையில் லாபம் பெற்றுள்ளது. இது புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டக்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக கோடீசுவரர்கள் பட்டியலில் 13 லட்சத்து 13 ஆயிரம் கோடியுடன் அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.