கடைக்குள் புகுந்து இனிப்பு சாப்பிட்ட யானை - வைரலாகும் வீடியோ
கடைக்குள் புகுந்து இனிப்பு சாப்பிட்ட யானையின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடைக்குள் புகுந்து இனிப்பு சாப்பிட்ட யானை
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும். குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன.
குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன. அதேபோல், தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், குவஹாத்தியின் சத்கான் பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் கடையில் இனிப்பு சாப்பிடுவதற்காக அம்சாங் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து யானை ஒன்று வெளியே வந்தது.
அப்போது அந்தக் கடைக்குள் புகுந்து யானை இனிப்புகளை அள்ளி சாப்பிட்டது. தற்போது இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே வியப்படைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
An #elephant came out of Amchang Wildlife Sanctuary to have sweets at a local shop in the Satgaon area of #Guwahati. #Viralvideo pic.twitter.com/uskNHgzjK7
— Zaitra (@Zaitra6) June 13, 2023