யானை கையெடுத்து கும்பிட்ட நபர் - பதிலுக்கு யானை செய்த செயல் - நெகிழ்ச்சி வீடியோ!
யானை கையெடுத்து கும்பிட்ட நபரைப் பார்த்து பதிலுக்கு யானை செய்த செயல் இணையதளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
யானை செய்த நெகிழ்ச்சி செயல்
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும். குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன.
குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன. அதேபோல், தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒருவர் யானைப் பார்க்கச் சென்றார். இந்த நபர் வருவதைப் பார்த்த யானை குண்டுக்குள் வந்து நின்றது. அப்போது, யானையைப் பார்த்து அந்த நபர் கையெடுத்து கும்பிட்டு வணங்கினார். பதிலுக்கு யானை தன் தும்பிக்கையை எடுத்து அவரை வணங்கி ஆசீர்வதித்தது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் யானையின் இந்த செயலை நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
2023年6月18日 16時前
— kayozou (@Jirokayozou) June 18, 2023
ズゼの寝室の扉が開きました。ズゼは扉の側にいなくて、呼ばれて💩を持って入ってきました。鍵がかかるまでお鼻あげて待ってから、カボチャお口にいただきました。#王子動物園 #アジアゾウ #ズゼ #ojizoo #elephant #Zuze pic.twitter.com/oA3rBXv3eC
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |