என்னா வெயிலு... குளுகுளு குளியல் போட்ட குட்டி யானை - வைரலாகும் வீடியோ
அடிக்கிற கோடை வெயிலுக்கு குட்டி யானை ஒன்று குளுகுளு குளியல் போட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குளியல் போட்ட குட்டி யானை
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும்.
குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன. குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
அதேபோல் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,
வெயில் கொடுமை தாங்க முடியாமல் குட்டி யானை ஒன்று ஆற்றில் உல்லாச குளியல் போட்டு ஜாலியாக மகிழ்ந்தது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே வியப்படைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
"Joy" a feeling of great pleasure and happiness - this baby #Elephant personifies joy, magical ?❤️ ?
— Sue Spurgin (@SueSpurgin) May 30, 2023
? Rodney Nomnekana IG pic.twitter.com/N7ktENyfWM