நபர் ஒருவரை கட்டியணைத்து கொஞ்சி விளையாடிய குட்டி யானை - க்யூட் வீடியோ!
நபர் ஒருவரிடம் கட்டியணைத்து கொஞ்சி விளையாடிய குட்டி யானையின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கட்டியணைத்து கொஞ்சி விளையாடிய குட்டி யானை
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும்.
குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன. குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
அதேபோல் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நபர் ஒருவரை கட்டியணைத்து குட்டி யானை ஒன்று அன்பை பொழிகிறது. அந்த குட்டி யானையின் சேட்டையில் அவர் சிரித்து சிரித்து விழுகிறார். உருண்டு, புரண்டு அவர் மேல் குட்டி யானை படுத்து சாய்ந்துக் கொள்கிறது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே நெகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
“It takes NOTHING away from a human to be kind to an animal.” ~ Joaquin Phoenix.
— Protect All Wildlife (@ProtectWldlife) May 24, 2023
An orphan Elephant lovingly plays with her carer at a sanctuary. pic.twitter.com/yJnIjlr31f