தன்னை காப்பாற்றியவருக்கு நன்றி தெரிவித்த யானை - வைரலாகும் வீடியோ
தன்னை காப்பாற்றியவருக்கு நன்றி தெரிவித்த யானையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காட்டு யானை
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும்.
யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன.
குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
நன்றி தெரிவித்த யானை
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
ஒரு காட்டு யானை மிகப் பெரிய பள்ளத்தில் விழுந்து விட்டது. அதனால், எழுந்து வர இயலாமல் பள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் புல்டோசர் மூலம் யானையை மீட்கும் பணியில் இறங்கினர். அப்போது பள்ளத்திலிருந்து வெளியே வர முடியாமல் தவித்த யானையை, டிரைவர் புல்டோசர் உதவியோடு வெளியே கொண்டு வந்தார்.
அப்போது பள்ளத்திலிருந்து வெளியே வந்த யானை சற்று தூரம் சென்று திரும்பி வந்து நன்றி சொல்லும் விதமாக அந்த புல்டோசரில் விளையாடியது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியத்தில் மூழ்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.
A village in India Rescue Elephant Using Excavator…. and It Wave Back to Thanks pic.twitter.com/0tZkHs2XT8
— Gabriele Corno (@Gabriele_Corno) April 23, 2023