Fact Check: சிறுவனைக் காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்த யானை: உண்மை பின்னணி இதோ
சிறுவன் ஒருவனைக் காப்பாற்றி அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கும் யானையின் காட்சி வைரலாகி வைரலானதையடுத்து இதன் உண்மைத்தன்மை தற்போது வெளியாகியுள்ளது.
நன்றி தெரிவித்த யானை
விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் யானை ஆகும்.
யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உருவத்தில் மட்டுமே மிகப்பெரியதாக இருக்கும் யானை, குணத்தில் குழந்தை என்று தான் கூற வேண்டும்.
சில தருணங்களில் பாகன் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்து நடப்பதை நாம் அவதானித்திருப்போம்.
ஆனால் சில தருணங்களில் ஆக்ரோஷமாக தாக்கவும் செய்கின்றது. அது ஏனெனில் தனது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தான் மனிதரை தாக்கி தன்னை பாதுகாத்துக் கொள்கின்றது.
இங்கு யானை ஒன்று சிறுவனை காப்பாற்றி அவனது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதை நாம் காணொளி ஒன்றில் அவதானித்துள்ளோம்.
ஆனால் இதன் உண்மைத்தன்னை என்னவெனில் இக்காணொளியானது AI Generated காணொளி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் AI-யின் செயல்பாடு அதிகரித்துவரும் நிலையில், தற்போது இம்மாதிரியான காணொளியிலும் AI தனது ஆதிக்கத்தை மேம்படுத்தி வருகின்றது
— Lord Shiv🥛 (@lordshivom) August 4, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |