சொந்தமாக ரயில் நிலையம் வைத்திருந்த ஒரே ஒரு நபர் யார் தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய பொதுபோக்குவரத்தாக ரயில் போக்குவரத்தை குறிப்பிடலாம், காடுகள் முதல் மலைகள் வரை, பாலைவனங்கள் முதல் சமவெளிகள் வரை அனைத்து பகுதிகளையும் இணைக்கும் ஒரே போக்குவரத்து ரயில் போக்குவரத்து தான்.
ஆனால் ஒரு ரயில் மட்டும் அரண்மனைக்கு நேரடியாக செல்லும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா, ஆம் ராம்பூர் அரண்மனை ரயில் நிலையத்தை தான் குறிப்பிடுகிறோம்.
ராம்பூர் நவாப்கள் மிகப்பெரும் செல்வந்தர்களாக இருந்ததால் தங்களுக்கென்று தனியாக ரயில் நிலையம் ஒன்றை கட்டினர், அப்பகுதியை கடக்கும் ரயில் அரண்மனைக்கே செல்லும்.
ராம்பூரின் ஒன்பதாம் நவாப்-ஆன ஹமீத் அலிகான், தனக்கென்று சொந்தமாக ரயில் நிலையம் ஒன்றை உருவா்ககினார். Milak மற்றும் Rampur நகரை இணைக்கும் 40கி.மீ தொலைவிலான ரயில் பாதை அரண்மனைக்கு செல்கிறது.
1925ம் ஆண்டு நான்கு பெட்டிகள் கொண்ட ரயிலை உருவாக்கினார், Saloon என பெயரிடப்பட்ட குறித்த ரயில் அவருக்கு மட்டுமே சொந்தமானது.
படுக்கையறை, சமையலறை உட்பட மற்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் நவாப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளும் இதில் இருந்தன. மேலும் அவருக்கென்று உதவியாளர்கள், சமையல் கலைஞர்கள் ரயிலில் பயணித்தனர்.
1954ம் ஆண்டு அரசாங்கத்துக்கு இரண்டு பெட்டிகளை வழங்கிய பின்னர், தனக்கென இரண்டு பெட்டிகளை வைத்துக்கொண்டார் நவாப்.(All Images: @IndiaHistorypic/ British library)