நொடியில் சுவையான முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி?
முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முட்டைகள் – 2
- கோதுமை பிரெட் துண்டுகள் – 4
- மிளகு தூள் – ½ தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- பால் – சிறிதளவு
- வெண்ணெய் – 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி – சிறிதளவு
வெந்நீருடன் ஒரே ஒரு துளி தேன் கலந்து குடிங்க... எடை தாறுமாறாக குறையும்! எப்படி தெரியுமா?
செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டை ஊற்றி அதனுடன் பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு வாணியில் வெண்ணெயை போட்டு சூடானதும் முட்டை கலவையை ஊற்றி மென்மையாக கிளறவும். கெட்டியாகி உதிரியாக வந்ததும் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
தோசைக்கல்லில் வெண்ணெய் விட்டு சூடானதும் இரண்டு கோதுமை பிரெட்டை பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
தட்டில் பிரெட்டை வைத்து அதன் மீது முட்டை கலவையை சேர்த்து இன்னொரு பிரெட்டால் மூடி பரிமாறவும். சுவையான முட்டை சாண்ட்விச் தயார்.
